சனி, 14 டிசம்பர், 2013

அந்த வெண்ணை யார்யா நம்மள கண்டுபிடிக்கிறதுக்கு

வாஸ்கோடகமா இந்தியாவை கண்டுபிடிச்சான்னு சொல்றதே தப்பு, அவன் வரதுக்கு முன்னாடி இருந்தே நாம இங்க தான் இருக்கோம்.

அந்த வெண்ணை யார்யா நம்மள கண்டுபிடிக்கிறதுக்கு

செருப்பு விற்பவனிடம் பார்க்கப்படாத சாதி செருப்பு தைப்பவரிடம் பார்க்கப்படுகிறது.

செருப்பு விற்பவனிடம் பார்க்கப்படாத சாதி 

செருப்பு தைப்பவரிடம் பார்க்கப்படுகிறது.
அப்படி சாதி பார்க்கிற நீங்க சாலையில் போகும்போது பிஞ்ச செருப்ப தைக்கபோகும் போது மட்டும் எங்கடா போகுது உங்க சாதி.

பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று,

விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது.

அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. 

” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார்.

போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

“இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்!

நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம்.

என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”.

பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது.

தமிழ் பொன்மொழிகள்


வியாழன், 21 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன.
8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.
இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவேறியதாக ஜெனீவாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறுதிக் கட்டப்போரின் போது நடந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன.
எனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.
போருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடுமையாக மறுத்துவருகிறது.

தகவல் மூலம்: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130321_geneva.shtml

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று


தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கிலம் மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன்னா தமிழ் என்று சொன்ன உடனே நம்ம நியாபகத்துக்கு வரத்து அதுதானே.

திருக்குறள் கி.மு.31ல் தமிழ் கடைசங்கத்தில் அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிசங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும். திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார் ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக்கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று.