வியாழன், 22 மார்ச், 2012

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன: 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன.
ஆனால், போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னரான இலங்கையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சனி, 17 மார்ச், 2012

ஆஸ்திரேலியாவில் ஒரு பஞ்சாப் மாணவன் இறந்தால் மல்லுக்கு நிற்கும் இந்திய அரசு சிங்களவனல் கொல்லபட்ட 200000 தமிழருக்கு என்ன செய்தது.

ஞாயிறு, 11 மார்ச், 2012


தமிழகத்தின் தலைநகரமம் சிங்கார சென்னையில் முக்கிய இடமான தாம்பரம் கிழக்கு பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுகிறது. இதை கண்டு கொள்ளாத மாநகராட்சி. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

வியாழன், 1 மார்ச், 2012

குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு நாட்டின் அபார வளர்ச்சி உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் உள்ள நம் நாடு ஊழல் காரணமாக இன்னும் வளராமல் இருக்கின்றது.

மனித உரிமை மீறல்

என்கவுண்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் பொது மக்களால் விரட்டி அடிப்பு. "வங்கி அதிகாரிகளை கொள்ளையர்கள் தாக்கிய பொழுது எங்கே சென்றீர்கள்". "இத்தாலி கப்பலில் வந்தவர்கள் மீனவர்களை சுட்டு கொன்ற பொழுது ஏன் தட்டி கேட்கவில்லை' ..பொது மக்கள் கேள்விகளால் மனித உரிமை அமைப்பினர் திணறல்.....##என்கவுண்டர் நடந்த வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் வலுக்கட்டாயமாக விசாரணை நடத்துவதும் மனித உரிமை மீறல் தானே......