திங்கள், 3 மார்ச், 2014

இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோர் இறைவன் ஆவார்


  

இன்று இணையத்தில் நான் படித்து என்னை கவர்ந்த செய்தி. 

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.
‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன. 

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.
திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்துகிறது” என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக்கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்.

புதன், 26 பிப்ரவரி, 2014

தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

இன்று இணையத்தில் நான் படித்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர்.தாயை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் வாலிபர் சம்பவத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இல்லை. குடிபோதையிலோ, போதை பொருட்களையோ எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல மனநிலையில்தான் இருந்துள்ளார் என்று போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி துர்கி அல்காமி பிறப்பித்த உத்தரவில், தாயாரை அடித்து பல்லை உடைத்த மகனுக்கு 2400 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டார். தாயாரை தாக்கிய குற்றத்திற்காக தண்டனையின் ஒரு பகுதியாக 10 நாட்களுக்கு தினமும் 40 சவுக்கடியை பொது இடத்தில் வைத்து அவருக்கு வழங்க வேண்டும்மேலும் இவர் தாக்கியதால் தாய்க்கு எந்த பல் உடைந்ததோ வாலிபரின் அதே பல்லையும் உடைக்க வேண்டும். மேலும் வாலிபர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதை போல நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் குற்றங்கள் குறையும் .

செய்தி ஆதாரம்: தினகரன் நாளிதழ் 24-02-2014

வியாழன், 20 பிப்ரவரி, 2014

விரைவில் அம்மா நாடு

பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகள் :

# குறைந்த விலையில் 20 லிட்டர் ‘அம்மா குடிநீர்’.

# வெளியூரிலிருந்து சென்னை வருவோருக்கு அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்.

# கிராமப் புறங்களிலிருந்து வந்து தங்கி படிக்கும், பணியாற்றும் பெண்களுக்கு அம்மா மகளிர் தங்கும் விடுதிகள்.

# சென்னையில் 200 வார்டுகளிலும் அம்மா வாரச்சந்தை.

# சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா திரையரங்கம்.

# சென்னை பள்ளிகளில் படிக்கும், படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு அம்மா கட்டணமில்லா கணினிப் பயிற்சி.

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா மெடிகல்ஸ், அம்மா திட்டம் (பசுமை வீடு திட்டத்தை தான் இவனுங்க இப்படி மாத்திடானுங்க).

விரைவில் அம்மா மின்சாரம், அம்மா ரயில் நிலையம், அம்மா காவல் நிலையம், அம்மா விமான நிலையம், அம்மா ஐ.டி பார்க் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

போற போக்க பாத்தா இவனுங்க தமிழ்நாட்டை அம்மா நாடு னு மாத்திடுவானுங்க போல