வியாழன், 12 ஜூலை, 2012

கழிப்பறைகள் இல்லாத இந்தியா!!!

கழிப்பறைகள் இல்லாத இந்தியா!!!
இந்தியாவின் மிகப்பெரிய அசிங்கம் ...இது தான் இந்தியாவின் பெரிய பிரச்சனை.
இந்தியாவில் மக்கள் தொகையில் 120 கோடியில் 50 % சதவித மக்களின் விடுகளில் கழிப்பறை இல்லை.(2011 census) 246.6 மில்லியன் குடும்பங்கள் 46.9 % பேர்கள் வீட்டில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளது. 49.8% குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர் மீதமுள்ள 3.2% மக்கள் பொது கழிப்பறைகள் பயன்படுத்துகின்றனர். 77 % சதவிதம் வீடுகளில் ஜார்க்கண்ட்லும்
76.6 %
சதவிதம் வீடுகளில் ஒரிசாவிலும் 75.8 % சதவிதம் வீடுகளில் பீகாரிலும் நமது தமிழத்தில் 60 % சதவிதம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. நமது கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம் , மூன்றில் இரண்டு விடுகளில் கழிப்பறைகள் இல்லை. பொது இடங்களையும் ,திறந்தவெளி இடங்களையும் நாம் கழிப்பறைகளாக பயன்படுத்துகிறோம்.இது நமது பண்பாட்டில் ஊரிபோயுள்ளது. இதற்கு காரணம் போதுமான கழிப்பறைகள் இல்லாத காரணத்தால அல்லது திறந்தவெளி இடங்களை மக்கள் விரும்புவதால் அல்லது இன்றும் மனித மலத்தை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற மமதையில் அதிகார வர்க்கம் செய்யும் சதியா?

சுதந்திரத்துக்கு முன்பு காந்தி ராஜ்கோட் ,குஜராத் மாநிலத்தில் உள்ள கழிப்பிட வசதிகளை பார்வையிட வந்தார் .அப்போது அவருக்கு தெரிய வந்த உண்மை மேல்மட்ட மக்களுக்கு தான் கழிப்பறை வசதிகள் அனுபவித்தனர் என்றும் தாழ்த்த பட்டவர்களுக்கு கழிப்பறை வசதி அனுமதிக்க படவில்லை என்று. நிண்ட காலம் களித்து காந்தி அவரது சீடர்களை மக்களுக்கு அடிப்படை கழிப்பறை அவசியம் பற்றி மக்களிடம் பரப்புரை செய்ய சொன்னார் .அத்துடன் கழிப்பறை இல்லாதவருக்கு அதை அமைத்தும் தர சொன்னார்.

இந்தியாவின் இந்த அவமானம் தெளிவாக அதன் கலாச்சார மனப்பான்மையில் வேரூன்றி உள்ளது. மேலும் சுதந்திரத்திற்கு பிறகு அரை நூற்றாண்டு கடந்து விட்ட பிறகும் , பல இந்தியர்கள் திறந்த வெளியை கழிப்பறையாகவும் மற்றும் குப்பை கொட்டும் இடமாகவும் எந்த குற்றவுணர்வும் இன்றி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இவர்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க விரும்புகின்றனர் .அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது , மக்கள் பழியை ஏற்க வேண்டும். வசதியனர்வர்களும் ,மேத்தா படித்தவர்களும் தங்கள் நாயை ரோடில் தான் மலம் கழிக்க வைக்கின்றனர்.ஆனால் நாம் பழியை அரசாங்கத்தின் மீது துக்கி போட்டுவிட்டு ,எல்லாத்துக்கும் அரசாங்கம் தான் கரணம் கற்பிப்போம் .முதலில் நாம் திருந்த வேண்டும்.

மத்திய அரசு கழிப்பறைகள் கட்ட மானியங்களை வழங்குகிறது மற்றும் பொது சுகாதாரம் , தனிமனித சுகாதாரத்தை பற்றிய பிரச்சாரங்களையும் நடத்துகின்றது.

2003
இல், அரசாங்கம் திறந்தவெளி மலம் கழித்தல் முறையை அகற்ற முடிவும் செய்து திட்டம் தீட்டி திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்கும் கிராம சபைகளுக்கு விருது வழங்கவும் முடிவு செய்து அமல் படுத்தியது .
கேரளாவில் 87% கிராம சபைகள் விருது பெற்றுகின்றன.ஏழை மாநிலமான பீகாரில் உள்ள 2% சுகாதார நிலையை குழுக்களில் இலக்கை எட்டமுடிந்தது .

கழிப்பறை வசதிகள் பற்றிய சில புள்ளி விவரங்கள்:
40%
பேர் மட்டுமே 2002 ல் சுகாதார வசதிகள் பெற்றிருந்தனர்.இது 2008-2009 51% என அதிகரித்தது.

பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் 60% வீடுகளில் கழிப்பறை இல்லாமல் இருகின்றனர் .

சீக்கிய மற்றும் கிரிஸ்துவர் குடும்பங்களின் 70% விடுகளில் கழிப்பறை இருக்கிறது. இந்துக்கள் குடும்பத்தில் 45% விடுகளில் கழிப்பறை இருக்கிறது

இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகள் ஒரு கழிப்பறை பெற வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு , இந்த ஆண்டு இறுதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லை என்ற நிலையை அடைய உள்ளது.

ஹரியானா திறந்த மலம் கழித்தல் சமாளிக்க கழிப்பறைகள் கட்ட நல்ல கழிவு மேலாணமை திட்டத்தை செய்யபடுத்தி, உள்ளூர் மக்கள் உதவியுடன் வெற்றி பெற்று உள்ளது . ஹரியானாவில் கழிப்பறைகள் கட்ட ஏழை வீடுகளுக்கு உபயோகப்பொருட்கள் மாணியன்களாக வழங்குகிறது.

எதை எதையோ ஓசி வழக்கும் தமிழக அரசு ஹரியானா மாநிலத்தை பின்பற்றி கழிவறை கட்ட மாணிய விலையில் பொருட்கள் வழங்கி சுகாதாரத்தை பேண வேண்டும்

மக்களும் ,அரசாங்கமும் இணைத்து செயல்பட்டால் மட்டுமே இந்த அசிங்கத்தில் இருத்து  தப்பிக்கும்.கழிவறைகள் தான் முக்கிய சுகாதார பிரச்சனை.நோய் பரப்பும் இந்த சுகாதார பிரச்சனை திர்க்கவிட்டால் ...பல புதிய நோய்களுக்கு வழிவகுக்கும்.

Source:
http://www.bbc.co.uk/news/world-asia-india-17377895

சூரிய ஒளி சக்தி

சூரிய ஒளி சக்தி மூலம் 22 Gigawatts மின்சாரம் தயாரித்து German உலக சாதனை

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.

புதன், 11 ஜூலை, 2012

மீட்டர்க்கு மேல காசு


வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி நேற்று இரவு ராயப்பேட்டையில் இருந்து யானைக்கவுனிக்கு ரூ.80 கட்டணம் பேசி, பயணியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் போதையில் இருந்த பயணி வாடகை தரமறுத்து தகராறு செய்தார். வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பச் சென்றார்.

தன்னுடைய ஆட்டோ நிறுத்திமிடம் சென்றபிறகு ஆட்டோவில் மஞ்சள் பை ஒன்றைப் பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகாரப் பயணி தவறவிட்டிருக்கக் கூடும் என்று யூகித்த பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை தானே எடுத்துக் கொள்ள முயலவில்லை.

21.06.2012 அன்று  காலையில் அந்தப் பணத்தை யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களைக் கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டிய காவலர்கள், அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் ஓட்டுநர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.