புதன், 26 பிப்ரவரி, 2014

தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

இன்று இணையத்தில் நான் படித்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர்.தாயை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் வாலிபர் சம்பவத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இல்லை. குடிபோதையிலோ, போதை பொருட்களையோ எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல மனநிலையில்தான் இருந்துள்ளார் என்று போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி துர்கி அல்காமி பிறப்பித்த உத்தரவில், தாயாரை அடித்து பல்லை உடைத்த மகனுக்கு 2400 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டார். தாயாரை தாக்கிய குற்றத்திற்காக தண்டனையின் ஒரு பகுதியாக 10 நாட்களுக்கு தினமும் 40 சவுக்கடியை பொது இடத்தில் வைத்து அவருக்கு வழங்க வேண்டும்மேலும் இவர் தாக்கியதால் தாய்க்கு எந்த பல் உடைந்ததோ வாலிபரின் அதே பல்லையும் உடைக்க வேண்டும். மேலும் வாலிபர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதை போல நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் குற்றங்கள் குறையும் .

செய்தி ஆதாரம்: தினகரன் நாளிதழ் 24-02-2014

வியாழன், 20 பிப்ரவரி, 2014

விரைவில் அம்மா நாடு

பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகள் :

# குறைந்த விலையில் 20 லிட்டர் ‘அம்மா குடிநீர்’.

# வெளியூரிலிருந்து சென்னை வருவோருக்கு அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்.

# கிராமப் புறங்களிலிருந்து வந்து தங்கி படிக்கும், பணியாற்றும் பெண்களுக்கு அம்மா மகளிர் தங்கும் விடுதிகள்.

# சென்னையில் 200 வார்டுகளிலும் அம்மா வாரச்சந்தை.

# சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா திரையரங்கம்.

# சென்னை பள்ளிகளில் படிக்கும், படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு அம்மா கட்டணமில்லா கணினிப் பயிற்சி.

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா மெடிகல்ஸ், அம்மா திட்டம் (பசுமை வீடு திட்டத்தை தான் இவனுங்க இப்படி மாத்திடானுங்க).

விரைவில் அம்மா மின்சாரம், அம்மா ரயில் நிலையம், அம்மா காவல் நிலையம், அம்மா விமான நிலையம், அம்மா ஐ.டி பார்க் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

போற போக்க பாத்தா இவனுங்க தமிழ்நாட்டை அம்மா நாடு னு மாத்திடுவானுங்க போல