ஞாயிறு, 13 மே, 2012

அரசு தந்த பரிசு


கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, குடனகாறு போன்ற நதிகளில் இருந்து மணல் திருடிய சமூக விரோதிகளை ஒழித்துக் கட்டினார்.

அது மட்டுமல்ல கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை அறிந்து பல மதுபான கடைகளுக்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்து மேல் மட்ட அதிகாரிகளுக்கு செல்ல வேண்டிய பல லட்ச ரூபாய் மாமூலலை தடை செய்தார்.

இப்படி பல விஷயங்களில் நேர்மையாக, தைரியமாக சமூக விரோதிகளை கலங்கடித்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் ஆர்.டி.ஓ.வாக பொறுப்பேற்ற சாந்தி. கடும் உழைப்பாளிகளை கண்டுகொள்ளாமல் விடுமா அரசு? அவருக்கு பரிசுவழங்கி இருக்கிறது, கரூரிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். மக்கள் இதை எதிர்த்து அரசுக்கு மனு மேல் மனு அனுப்பி கொண்டு இருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக