இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக்
கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட
வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள்
பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம்
தொடர்பில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன: 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன.
ஆனால், போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னரான இலங்கையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக