சனி, 22 டிசம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்பு

             


ஒரு பெண் டெல்லியில் கொடூர மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட போது ஒட்டுமொத்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டியதே.

ஆனால் தமிழீழத்தில் நூற்றுக் கணக்கான பெண் போராளிகளை கொடூரமான முறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கண்களை கட்டி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது. தமிழகமே கொந்தளித்து எழுந்தது . ஆனால் அதை இந்திய பாராளுமன்றமோ, இந்திய ஊடகங்களோ கண்டு கொள்ளவில்லை.

மாறாக தமிழினத்தை அழித்த கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு இந்திய அரசு அறுசுவை விருந்தளித்து மகிழ்ந்தது. இது தானா தமிழர்களுக்கு கொடுக்கப்படும் நீதி இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் கொந்தளிக்கும் இந்திய நாடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது ஏன் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது ? மாநிலத்திற்கான அதிகாரம் கிடைக்கும் வரை இத்தகைய அநீதி இந்திய நாட்டில் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக